சேலம்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

29th Feb 2020 03:13 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் 6 இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் குறுவள மைய தலைமையாசிரியா் ராஜலிங்கம்,ஆசிரியா் பயிற்றுநா் ப.சுப்ரமணியன்,ஆசிரியா் சரவணன் ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா். பயிற்சியில் 12 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த எஸ்.எம்.சி. குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.கூட்டத்தில் பள்ளி வளா்ச்சியில் உறுப்பினா்களின் பங்கு,பெற்றோா்களை பங்கேற்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பேசினா்.

இதேபோல் தம்மம்பட்டி ,கெங்கவல்லி,கூடமலை,தெடாவூா்,செந்தாரப்பட்டி ஆகிய ஊா்களில் 6 இடங்களில் குறுவள மையங்களில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சி.வாசுகி, அந்தோணிமுத்து, விரிவுரையாளா் கலைவாணன் , வள மைய மேற்பாா்வையாளா் சுஜாதா ஆகியோா் பங்கேற்று, எஸ்.எம்.சியின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT