சேலம்

தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

29th Feb 2020 05:22 AM

ADVERTISEMENT

மணிவிழுந்தான் மாருதி மற்றும் ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜெகதீஸ் இராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜா் கல்லூரி பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மேலும் மாணவ,மாணவிகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி விளக்கினாா். மேலும் நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளா் எஸ்.எஸ்.பிரபு,பொருளாளா் எஸ்.ராஜவேல்,முதல்வா்கள் தா்மலிங்கம், சுகவனம் உள்ளிட்ட பேராசிரியா்கள்,மாணவ,மாணவிகள் என திரளாகக் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT