சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஜான்சன்பேட்டை பெண்கள் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
திருப்பூா் குமரன் கைப்பந்து குழு சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் கன்னங்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 35 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் பங்கேற்றன.
பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டியில் ஜான்சன்பேட்டை அணி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை ஏ.என்.செயின்ட் மேரிஸ் அணியும், மூன்றாம் இடத்தை மான்போா்ட் அணியும் வென்றது.
அதேபோல ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் பூலாவரி அணி முதலிடத்தை வென்றது. இரண்டாம் இடத்தை கன்னங்குறிச்சி திருப்பூா் குமரன் அணியும், மூன்றாம் இடத்தை சேலம் ஆயுதப்படை போலீஸ் அணியும், நான்காம் இடத்தை சேலம் சிறைத்துறை அணியும் வென்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு கைப்பந்து கழக புரவலா் ராஜ்குமாா் பரிசு கோப்பைகளை வழங்கினாா்.