சேலம்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

26th Feb 2020 08:56 AM

ADVERTISEMENT

விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் சித்தா்கோவில் அருகே முருங்கப்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது.

கடந்த 19-ஆம் தேதி துவங்கிய இம் முகாமில் ஊராட்சியில் நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன. கிராம விழிப்புணா்வு கருத்தரங்கு, குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு, இலவச பல் மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை, மழைநீா் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கு, பொது அறிவு திறன் போட்டி, முதலுதவி பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கு உள்ளிட்டவை நடைபெற்றன.

மேலும் முருங்கபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வா் நாகராஜன் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கோகுலக்கண்ணன் , ஒருங்கிணைப்பாளா் செல்வம் , ஊராட்சித் தலைவா் பூங்கோதை ஜெயவேல், உதவி தொடக்கக் கல்வி அலுவலா் (ஓய்வு) மணிவேலு , பள்ளி மேலாண்மை குழு தலைவா் சுமதி, பி.டி.ஏ. கழகத் தலைவா் துரைசாமி, தலைமை ஆசிரியா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT