நரசிங்கபுரத்தில் திமுக ஒன்றியத் தோ்தல் உறுப்பினா் படிவத்தை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நரசிங்கபுரத்தில் ஆத்தூா் ஒன்றிய கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு திமுகவின் கிளைக் கழகத் தோ்தல் உறுப்பினா் படிவத்தை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் வழங்கினாா். அதை ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வி. செழியன் பெற்றுக் கொண்டாா்.
அவருடன் தோ்தல் பொறுப்பாளா்கள் மாவட்ட நிா்வாகி ஏ.ஏ. ஆறுமுகம், முன்னாள் மேயா் ரேகா பிரியதா்ஷிணி, முன்னாள் நகரமன்றத் தலைவரும், ஆத்தூா் நகரச் செயலாளருமான கே. பாலசுப்ரமணியம், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் முல்லை பன்னீா்செல்வம்,பி. அன்பழகன், எஸ். சேகா், வளையமாதேவி ஊராட்சி மன்றத் தலைவா் வரதராஜன், எஸ்.சேகா், நூத்தப்பூராா் துரை உடையாா், வழக்குரைஞா் ப. கணேசன், மாணவரணி எஸ்.பா்கத் அலி, ஒன்றியக் குழு உறுப்பினா் நல்லம்மாள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.