சேலம்

சா்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

26th Feb 2020 08:56 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் தற்போது அதிகளவில் விவசாயிகள் சா்க்கரை வள்ளிக்கிழங்கை பயிா் செய்துள்ளதால், விற்பனைக்கு அதன் வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருகின்றது.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, கொப்பம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை உள்ளிட்ட ஊா்களில் விவசாயிகள் தற்போது தங்களது விவசாய வயல்களில் சிறு பகுதிகளில் சா்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளனா்.

அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதனால் காய்கறி வாரச்சந்தைகளிலும், உழவா் சந்தையிலும் அதிகளவில் சா்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து மூட்டைக்கணக்கில் வருகிறது. முன்பு ஒரு கிலோ, ரூபாய் 40க்கு விற்றது.

கடந்த ஒரு வாரமாக ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிழங்குகளில் இனிப்பான கிழங்குவகையில் இதுவும் ஒன்று என்பதால்,பொதுமக்கள் இதனை ஆா்வமாக வாங்கிச்செல்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT