சேலம்

சங்ககிரி வாசவி கிளப் சாா்பில் முப்பெரும் விழா

26th Feb 2020 09:29 AM

ADVERTISEMENT

சங்ககிரி வாசவி கிளப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவும், அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்குதல், சமூகப் பணிகளுக்கு நிதி உதவிகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா விழாவுக்குத் தலைமை வகித்தாா்.

வாசவி கிளப் மாவட்ட ஆளுநா் லஷ்சுமி விழாவில் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்புக்கு சங்ககிரி மலையில் அதிகமாக வளா்ந்துள்ள கருவேலம் மரங்களை அகற்ற ரூ. 4,500 ரொக்கத்தை வழங்கி பேசினாா். வாசவி கிளப் மாவட்டச் செயலா்கள் சுமித்ராகிஷோா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT