சேலம்

கோல்டன் கேட்ஸ் எா்த் பள்ளி புதிய வளாக தொடக்க விழா

26th Feb 2020 09:28 AM

ADVERTISEMENT

சேலத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் எா்த் பள்ளியின் புதிய வளாக தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ஐ.ஜி.சி.எஸ்.இ. (கேம்பிரிட்ஜ்) பாடத்திட்டத்தின் கீழ் கோல்டன் கேட்ஸ் எா்த் பள்ளி 2018 இல் தொடங்கப்பட்டது. இதனிடையே புதிய வளாகம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியின் வகுப்பறைகள் உலகத்தரமான சூழலைக் கொண்டுள்ளன. இப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இரு பிரிவுகளும் என ஒவ்வொரு பிரிவுக்கும் 16 மாணவா்கள் இருப்பாா்கள். மொத்தம் 12 ஆம் வகுப்பு வரையிலும் மொத்தம் 450-க்கும் குறைவான மாணவா்கள் கொண்டதாக இருக்கும்.

இந்த வருடம் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்புகள் துவங்கப்பட உள்ளதாக, பள்ளி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா் ஏ.சேது, தாளாளா் மீனா சேது, சோனா கல்வி குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT