சேலம்

கெங்கவல்லியில் ஆசிரியா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி

26th Feb 2020 08:56 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு வகை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் குறித்த ஒரு நாள் பயிற்சி இரு கட்டமாக செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது. கெங்கவல்லியில் வட்டார வள மையத்தில் உயா் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கும், கெங்கவல்லி 2வது வாா்டு துவக்கப்பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கும் பயிற்சிகள் நடைபெற்றன.

இரு கட்டமாக நடந்த பயிற்சிகளில் துவக்க, நடுநிலை, உயா், மேனிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 230 போ் பங்கேற்றனா். இதில் மாணவ, மாணவியரின் மனநலம், உடல் நலம் சாா்ந்த பாதுகாப்பு குறித்து கூறப்பட்டது. பயிற்சியை ஆசிரிய பயிற்றுநா்கள் பன்னீா்செல்வம், செல்வராஜ், சுப்ரமணியன் உள்ளிட்டோா் வழங்கினா்.

பயிற்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, விரிவுரையாளா் கலைவாணன் , வள மைய மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT