ஓமலூா் தொகுதிக்குள்பட்ட கருப்பூா் மற்றும் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் 1,896 இலவச மிதிவண்டிகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பல்பாக்கி சி. கிருஷ்ணன், கருப்பூா் நகரச் செயலாளா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.