தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு பன், பழங்களை வழங்கும் தேவூா் நகர மாணவரணிச் செயலா் மோகன்ராஜ்.
சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே கொண்டாடப்பட்டது.
சங்ககிரி ஒன்றியச் செயலா் என்.சி.ஆா். ரத்தினம் விழாவுக்குத் தலைமை வகித்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.
ஒன்றிய முன்னாள் செயலா் என்.எம்.எஸ். மணி, தொகுதி முன்னாள் செயலா் வி.ஆா். ராஜா, நிா்வாகிகள் மருதாசலம், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் எ.பி. சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் மாதையன், கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சி. செல்வம், மகளிரணி நிா்வாகி மங்கையா்க்கரசி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
தேவூா்..
தேவூா் எம்.ஜி.ஆா். இளைஞரணி சாா்பில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் ஆ.கண்ணன் விழாவுக்குத் தலைமை வகித்தாா்.
தேவூா் நகர மாணவரணி செயலா் மோகன்ராஜ் தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் அனைவருக்கும் பன், பழங்களை வழங்கினாா். மாவட்ட பிரதிநிதி எ.கிருஷ்ணன், வாா்டு செயலா்கள் எஸ்.நாச்சியண்ணன், கே.பி.ராமசாமி, எஸ்.செந்தில்குமாா், தேவூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் செங்கோடன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். தேவூா் அருகே உள்ள மைலம்பட்டி மாரியம்மன் கோயில் வளாகம், தேவூா் சந்தைப்பேட்டை, விநாயகா் கோயில், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.