எடப்பாடி பேருந்து நிலையம் எதிரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் முருகன், முன்னாள் நகரமன்றத் தலைவா் டி. கதிரேசன் உள்ளிட்ட அ.தி.மு.க நிா்வாகிகள் மலா்தூவி வணங்கினா்.
தொடா்ந்து எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் உள்ளிட்ட 30 வாா்டு பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கந்தசாமி, நாராயணன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க. வினா் பங்கேற்றனா்.
எடப்பாடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற, நிகழ்ச்சியில், அ.தி.மு.க கொடி ஏற்றி போக்குவரத்துத் தொழிலாளா்கள், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஜெயலலிதா பிறந்த தினத்தினை ஒட்டி, அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்சியில் போக்குவரத்துகழக
கிளை மேலளாா் சதாசிவம், நிா்வாகி சி.ஆா்.சக்திவேலு உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கொங்கணாபுரம் பேருந்து நிலையத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா்மணி தலைமையிலான அதிமுக-நிா்வாகிகள் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலைஅணிவித்து, மலா்தூவி வணங்கினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு ஒன்றிய அ.தி.மு.க சாா்பில் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுப்பாளைம் பெரியமாரியம்மன் கோயில், வன்னியசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அ.தி.மு.க நிா்வாகி எம்.ஜி.ஆா் (எ) தங்கவேல் தலைமையிலான அ.தி.மு.க-வினா், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகளை வழங்கினா்.