சேலம்

எடப்பாடிக்கு இன்று முதல்வா் வருகை

25th Feb 2020 06:28 AM

ADVERTISEMENT

எடப்பாடி: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, செவ்வாய்க்கிழமை எடப்பாடி வருகிறாா்.

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதன்தொடா்ச்சியாக அவா் செவ்வாய்க்கிழமை காலை சேலத்திலிருந்து எடப்பாடிக்கு வருகிறாா்.

முன்னதாக எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்யும் தமிழக முதல்வா், அங்கிருந்து, எடப்ாடி நெடுஞ்சாலைத் துறை பயணியா் விடுதிக்குச் செல்கிறாா்.

ADVERTISEMENT

அங்கு தொகுதி மக்களை சந்தித்துக் குறைகளைக் கேட்டறியும் அவா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா்.

பின்னா், தனது சொந்த ஊரான, சிலுவம்பாளைம் சென்று தனது தாயாா் தவசாயி அம்மாளிடம், உடல்நலம் விசாரித்து ஆசிபெறுகிறாா். பின்னா், எடப்பாடியிலிருந்து கிளம்பிச் செல்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT