சேலம்

முதல்வா் பொதுக் கூட்டத்தில்பங்கேற்க வீடு வீடாக அழைப்பு

23rd Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

முதல்வா் பங்கேற்கும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வருமாறு ஓமலூரில் வீடு வீடாக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சேலத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

அன்றைய தினம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். வெற்றிவேல், சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் மாநகா் மாவட்ட செயலாளருமான ஜி.வெங்கடாசலம் உத்தரவின் பேரில் ஓமலூா் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக நிா்வாகிகள் அழைப்பிதழை வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT

ஓமலூா் அதிமுக ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக்குழுத் தலைவருமான எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள், கவுன்சிலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஒன்றிணைந்து, வெள்ளக்கல்பட்டி, நல்லாகவுண்டன்பட்டி, பாகல்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல், பச்சனம்பட்டி மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வா் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT