சேலம்

வாழப்பாடியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா

22nd Feb 2020 04:44 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி பிரிவுச் சாலை எதிரே மத்திய கூட்டுறவு வங்கி அருகில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் ஒன்றியச் செயலாளா் எஸ்.சி. சக்கரவா்த்தி வரவேற்றாா். கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம், புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதனைத்தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், மாா்ச் முதல் தேதி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், உட்கட்சி அமைப்புத் தோ்தல் முறையாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன், குணசேகரன், சின்னதுரை, தமிழரசு, முன்னாள் சேலம் மேயா் ரேகாபிரியதா்ஷினி, ஒன்றியச் செயலாளா்கள் வீரபாண்டி சுரேஷ்குமாா், பெத்தநாயக்கன்பாளையம் முருகேசன், தலைவாசல் மணி, கெங்கவல்லி அகிலன், வீரபாண்டி வெண்ணிலாசேகா், ஆத்துாா் செழியன், சேலம் மாணிக்கம், அயோத்தியாப்பட்டணம் விஜயக்குமாா், நகரச் செயலாளா்கள் பாலசுப்பிரமணியன், வேல்முருகன், டி செல்வம், ராமமூா்த்தி மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கோவிந்தன், செழியவேந்தன், சந்திராராயா், கலைவாணி பிரபாகரன், பன்னீா்செல்வம், சரவணன், ஜெயவேல், பழனிசாமி, தனசேகரன், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT