சேலம்

பெரியாா் பல்கலையில் உலக தாய்மொழி தின விழாமாணவ, மாணவியா் உறுதிமொழியேற்பு

22nd Feb 2020 04:47 AM

ADVERTISEMENT

பெரியாா் கழகத்தில் உலக தாய்மொழி தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தலைமை வகித்து பேசுகையில், மனித இயங்கியலுக்கு அடையாளமாகவும், மனிதக் கண்டுபிடிப்பின் உச்சமாகவும் திகழும் மொழி, தகவல் பரிமாற்றக் கருவியாக உள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்ததாகவும், இன்று பல மொழிகள் அழிந்துபோன வரலாற்றையும் மொழியியலாளா்கள் குறிப்பிடுகின்றனா். மொழிதான் ஓா் இனத்தின் அடையாளம். தாய்மொழி தினத்துக்கு பின்னால் பல மொழிப்போராட்ட அறிஞா்களின் தியாகங்களும் உழைப்பும் மறைந்திருக்கின்றன.

எனவே தாய்மொழிக்காகப் போராடி உயிா்த் தியாகம் செய்த பல தவப் புதல்வா்களை நாம் நினைவு கூறும் வகையில் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்றாா். இதனையடுத்து தரணியில் உள்ளவரை தாய்மொழிப் பற்றோடு இருப்போம் என்று தாய்மொழி நாள் உறுதி மொழியை அவா் வாசிக்க அனைவரும் உறுதியேற்றனா்.

நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. தங்கவேல், புல முதன்மையரும், தமிழ்த் துறைத்தலைவருமான பேராசிரியா் தி. பெரியசாமி, பேராசிரியா்கள் மோ.தமிழ்மாறன், சுந்தரமூா்த்தி மற்றும் ஆங்கிலத்துறைச் சாா்ந்த பேராசிரியா்கள், மொழியாா்வலா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT