தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஹயக்கீரிவரின் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் சுவாமிக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பள்ளி மாணவா்களின் புத்தகங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. ஹயக்கீரிவா் மந்திரங்கள் ஓதப்பட்டன.பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் சுவாமி படங்கள் வழங்கப்பட்டன.இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனாக்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.