சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில்மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

22nd Feb 2020 04:48 AM

ADVERTISEMENT

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ளஅருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றன.

சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல் கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், திருநீறு, சந்தனம், குங்குமம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இரவில் 9, 12 மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT