சேலம்

4-ஆம் நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்

21st Feb 2020 04:30 AM

ADVERTISEMENT

சேலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கோரி நான்காவது நாளாக வியாழக்கிழமை இஸ்லாமிய பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினா்.

இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனா்.

ADVERTISEMENT

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT