சேலம்

வனத் துறையின் தகவல் பலகை அகற்றம்

15th Feb 2020 08:34 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த சொக்கனூரில் வனத்துறைக்குச் சொந்தமான இடம் குறித்து வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை அகற்றப்பட்டுள்ளது.

வனத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில், பலா் முயற்சித்து வருகின்றனா். ஏற்கெனவே வனத்துறை, பேரூராட்சிகளுக்குச் சொந்தமான சுமாா் 40 ஏக்கருக்கு மேல் இங்கு ஆக்கிரமிப்பில் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து தலைவாசலில் அண்மையில் நடைபெற்ற முதல்வரின் குறைதீா்ப்பு கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது . இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆக்கிரமிப்பாளா்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை விரிவுப்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த தகவல்பலகையை சிலா் ஜேசிபி வைத்து அப்புறப்படுத்தி அந்த இடத்தை நிரவி உள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் சிக்காமல் அரசுத் துறையினா் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசுக்கு சொந்தமான இடம் என்று சா்வே எண்ணுடன் கூடிய விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT