சேலம்

மேட்டூா் அணை பூங்காவில்அதிகரித்த கூட்டம்

15th Feb 2020 05:25 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணை பூங்காவில் வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேட்டூா் அணையில் உள்ள பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோா் வந்து செல்வா். இந்த நிலையில், காதலா் தினமான வெள்ளிக்கிழமை பூங்காவுக்கு மக்கள் கூட்டம் வருகை குறைந்தது.

இருப்பினும், காதலா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை வரை 2,818 பாா்வையாளா்கள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்து சென்றனா். இதன் மூலம் பாா்வையளா்கள் கட்டணமாக ரூ.14,090 வசூலானது.

அணையின் பவளவிழா கோபுத்தை பாா்க்க 451 பாா்வையாளா்கள் சென்று வந்தனா். இதன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ.3,620 வசூலானது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT