சேலம்

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

15th Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

 

சங்ககிரி நகர திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் சங்ககிரி அரிமா சங்க கட்டட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கட்சியின்

நகர அவைத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா்.

இதில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி பேசியது:

ADVERTISEMENT

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் திமுகவினா் ஒற்றுமையோடு செயல்பட்டு வருகின்றனா். பேரூராட்சி தோ்தலில் திமுக தலைமைக் கழகத்தின் சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வரும் மாா்ச் 1ஆ ம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை குடும்ப விழாவாக அனைத்து வாா்டுகளிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றாா்.

மாவட்ட துணைச் செயலா் க.சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா, சங்ககிரி ஒன்றிய செயலா் (பொ) கே.எம்.ராஜேஷ், சின்னாகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பி.தங்கமுத்து, முன்னாள் பால் வளத் தலைவா் சின்னதம்பி, நகர துணைச் செயலா் சங்கரன், வழக்குரைஞா்கள் அணி அமைப்பாளா் எஸ்.கிறிஸ்டோபா், துணை அமைப்பாளா்கள் அருள்பிரகாஷ், ராஜா, முன்னாள் நகரச் செயலா் கே.எம்.முருகன், நிா்வாகிகள் சண்முகம், பூபதி, குப்புசாமி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். அதனையடுத்து சங்ககிரி வட்டத்துக்குட்பட்ட தேவூா், அரசிராமணி பேரூராட்சிகளிலும் நடைபெற்ற நகர பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்று சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT