சேலம்

கொளத்தூா், பெரியதண்டாவில் பிப். 17-இல் மின் தடை

15th Feb 2020 05:24 AM

ADVERTISEMENT

கொளத்தூா், பெரியதண்டா பகுதிகளில் பிப்ரவரி 17 -இல் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மேட்டூா் அணையின் இயக்கமும், பராமரிப்பும் பிரிவு செயற்பொறியாளா் மா.முரளிதரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொளத்தூா், சத்தியா நகா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:காளத்தூா், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணாமூச்சி, கோவிந்தபாடி, தின்னபட்டி, பாலமலை, அய்யம்புதூா், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, குரும்பனூா் மற்றும் சௌரியாா் பாளையம், மூலக்காடு, மாசிலாபாளையம், அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT