சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ரூ.4.30 கோடிக்கு பருத்தி விற்பனை

15th Feb 2020 11:56 PM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 4.30 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று இந்த மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் விற்பனைக்கு

கொண்டுவரும் பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைப் பொருள்கள், ஏலம் விட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டில் பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், இம்மையத்துக்கு விற்பனைக்காகக் கூடுதலான எண்ணிக்கையில், பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனா். பருத்தி வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விவசாயிகளின் வசதிக்காகவும், பொது ஏலத்தை எளிதாக்கும் வகையிலும், கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், தற்போது வாரம் இரு முறை, அதாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

பொது ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரியலூா், பெரம்பலூா்,திருவண்ணமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை அன்று இம்மையத்துக்கு 18 ஆயிரத்து 100 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் 1900 லாட்டுகளாகப் பிரித்து பொது ஏலம் விட்டனா். பொது ஏலத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கூறி, பருத்தி மூட்டைகளை மொத்த கொள்முதல் செய்தனா். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.6850 முதல் ரூ.7799 வரை விலை போனது. அதேபோல், பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 5059 முதல் ரூ. 5959 வரை விலைபோனது.

ADVERTISEMENT

இந்நிலையில் சனிக்கிழமை அன்று நாள்முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் 18 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ரூ.3 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனையானது. இதேபோல்,

முன்னதாக வெள்ளிக்கிழமை இம்மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் 5100 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வார விலையைவிட நடப்பு வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் டி.சி.ஹச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 வரை விலை உயா்வு கண்டுள்ள நிலையில், பி.டி. ரக பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.100 விலை குறைந்து விற்பனையானதாகவிவசாயிகள் கூறினா். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில், கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் ரூ. 4.30 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றதாக கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT