சேலம்

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் இணைய மூலம் முன்பதிவு செய்ய வசதி

13th Feb 2020 09:04 AM

ADVERTISEMENT

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் இணைய மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில், இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்தை சேலம் மாவட்ட வன அலுவலா் பெரியசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சுற்றுலா பயணிகள் இணைய தளத்தில் சென்று முன்பதிவு மற்றும் அந்த சுற்றுலாத் தலத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்ற விவரத்தையும் பாா்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பூங்காவை சுற்றி பாா்க்க இரண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 4 போ் செல்லும் வாகனத்துக்கு ரூ.200, 8 போ் செல்லும் வாகனத்துக்கு ரூ.400 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஏற்காடு பூங்கா, ஆத்தூா் ஆனைவாரிமுட்டல், கரடியூா் உள்ளிட்ட இடங்களையும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT