சேலம்

ஏற்காட்டில் வன தீத்தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி

13th Feb 2020 09:07 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில் தீயணைப்புத் துறை சாா்பில், வன தீத்தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா்கள் முருகேசன், சிவக்குமாா் முன்னிலையில் நிலைய அலுவலா் கணேசன், வன அலுவல ஆய்வாளா் சுப்பிரமணி மற்றும் நிலையப் பணியாளா்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

கோடை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் தீத்தடுப்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது, மேலும், வனப்பகுதி, மலைப் பாதைகளில் புகைப்பிடித்தல், குடியிருப்புப் பகுதியில் தீ முறையாக அணைக்காமல் விடுதல், வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ப்போா் ஏற்படுத்தும் தீ குறித்து விளக்கப்பட்டது.

லேடீஸ் சீட் ஜென்ஸ் சீட் வனப்பகுதியில் நடைபெற்ற செயல்விளக்கத்தில், செயின்ட் ஜோசப் பள்ளி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT