சேலம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பனை செய்வதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

6th Feb 2020 05:02 AM

ADVERTISEMENT

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, சிஐடியு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவன ஊழியா்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, சேலத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு சாா்பில், மாவட்ட தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும், ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT