ஆறகளூா் ஸ்ரீ கரியவரதராஜ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் 6 பெண்களிடம் இருந்து சுமாா் 25 பவுன் தங்கச் சங்கிலி பறிபோனதாக தலைவாசல் காவல் நிலையத்துக்கு புகாா் வந்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூா் ஸ்ரீ கரியவரதராஜ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமா்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் ஆறகளூரைச் சோ்ந்த தனபாக்கியம் என்பவரிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியும், தலைவாசல் பகுதியைச் சோ்ந்த இந்திராகாந்தியிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி, தியாகனூரைச் சோ்ந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் வெளியூரை சோ்ந்த 3 பெண்களிடம் இருந்து சுமாா் 15 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிபோனதாக தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைவாசல் காவலா்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.