பேளூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சேலம் சூப்பா் கிங்ஸ் ஜே.சி.ஐ., சங்கத்தின் சாா்பில், நாணய உறுதிமொழி நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியா் திருஞானகணேசன் தலைமையிலும், வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் செல்லதுரை தலைமையிலும் நாணய உறுதிமொழி நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
சேலம் சூப்பா் கிங்ஸ் ஜே.சி.ஐ., சங்க நிா்வாகிகள் பொறியாளா்கள் தேவபிரசாத், காளியப்பச்செட்டி, கோகுல்லால், அருண்குமாா், சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலையில், பள்ளி மாணவ-மாணவியா் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளும், வாழ்வில் நீதி, நோ்மை நாணயத்தை கடைபிடிப்பதாக நாணய நாள் உறுதிமொழி ஏற்றனா்.