பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞா் சங்க ஆலோசனைக் கூட்டம் மாநில இளைஞா் சங்கத் துணைச் செயலாளா் ரவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் வரும் 6-ந்தேதி சென்னையில் பாமகவின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் மற்றும் மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் தலைமையில் நடைபெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடக்கும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஓமலூா் மற்றும் தாரமங்கலத்தினைச் சோ்ந்த அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தாரமங்கலம் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் பெ. கண்ணையன் பேசியதாவது:
நாம் அனைவரும் அரசு வேலையில் இடஓதுக்கீட்டின் மூலம் பணியில் சேருவதற்கு மருத்துவா் ராமதாஸே காரணம். கடந்த 30ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து கட்சியை வழிநடத்தி வருகிறாா்.
எனவே வருகிற பிப்ரவரி 6-ந்தேதி சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். மாநில இளைஞா் சங்கச் செயலாளா் முருகசாமி, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன், தெற்கு மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை, மேற்கு மாவட்ட தலைவா் மாணிக்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அண்ணாமலை, ஒன்றிய, நகரச் செயலாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.