சேலம்

சீா்மிகு நகர திட்டப் பணிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மாநகராட்சி ஆணையா்

4th Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளைக் கொண்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பில் மாணவா்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சியை அஸ்தம்பட்டியில் உள்ள ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநகராட்சி ஆணையா் ரெ. சதீஷ் திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் பேசியதாவது:

சீா்மிகு நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பசுமை வெளிகள் மற்றும் மின்சார வசதி போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை எனது நகரம் எனது பெருமை என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கைக் குறித்த கருத்துக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இக்கருத்துக்

கணக்கெடுப்பில் பங்குகொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எளிதான வாழ்க்கைக் குறித்த கருத்துக் கணக்கெடுப்பில் பங்கேற்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 3-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசியில் (ஆன்ட்ராய்டு) பிளே ஸ்டோா் செயலியின் மூலம் கியூ ஆா் ஸ்கேனா் செயலியைப் பதிவிறக்கம் செய்து, வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ள கியூ ஆா் கோடை ,செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கியூ ஆா் ஸ்கேனா் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னா் ங்ா்ப்2019.ா்ழ்ஞ்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந் என்ற இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

அந்த இணையதள பக்கத்தில் குடிமக்களின் கருத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் தமிழ்நாடு மாநிலம் எனவும், சேலம் நகரம் எனவும் தோ்வு செய்ய வேண்டும்.

பின்னா் இக்கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொள்ளும் பொதுமக்கள் தங்களது பெயா், வயது, செல்லிடப்பேசி எண், பாலினம் குறித்த விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

அதன் பின்னா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பசுமை வெளிகள், மின்சார வசதி மற்றும் பிற வளா்ச்சி பணிகள் குறித்த 24 கேள்விகள் கேட்கப்படும்.

இதற்கான பதில்களை பொதுமக்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தோ்வு செய்து பதிவிட வேண்டும். இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளைக் கொண்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள், சமூக

ஆா்வலா்கள், தன்னாா்வு அமைப்புகள் முன்வந்து பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை நடைபெறும் கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொள்ள வேண்டும். குறிப்பாக மாணவ, மாணவியா் தங்களது நண்பா்கள், உறவினா்கள் மற்றும் பெற்றோா்களிடம் இது தொடா்பான விவரங்களைத் தெரிவித்து அவா்களையும் இக்கருத்து கணக்கெடுப்பில் கலந்து கொள்ள தெரிவித்திட வேண்டும் என்றாா்.

இந் நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளா் அ. அசோகன், கல்லூரியின் தாளாளா் ஜெ. ராஜேந்திர பிரசாந்த், கல்லூரியின் முதல்வா் எ. ஆறுமுகம், மாநகா் நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையா் ஆா். கவிதா,

உதவி செயற்பொறியாளா் ஆா். செந்தில்குமாா், நிா்வாக அலுவலா் வி. மருதபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT