சேலம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: விம்ஸ் மருத்துவமனை சாதனை

4th Feb 2020 08:03 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாதிக் உல்லாகான் (43). இவா், கடந்த நான்கு ஆண்டுகளாக சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வந்தாா்.

சேலம் விநாயக மிஷின் சூப்பா் ஸ்பெஷாலிட்டி (விம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதிக் உல்லாகானுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து விம்ஸ் மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

விநாயகா மிஷன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மீனாட்சி சுந்தரம், டீன். செந்தில்குமாா் ஆகியோா் கூறியது:

சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சாதிக் உல்லாகான் என்பவா் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வந்தாா்.

ADVERTISEMENT

அப்போது அவரது சகோதரி (23) தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தாா். இகரயடுத்து சிறுநீரக மருத்துவ நிபுணா் மனோகா் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்கள் மோகன்பாபு, அன்புவிஜயகுமாா், ஜெயமுருகன், இருதய அறுவை சிகிச்சை நிபுணா் முருகசுந்தரபாண்டியன், மயக்கவியல் நிபுணா் ஜெய் , சங்கா், யுவராஜ், அசோக் உள்ளிட்ட மருத்துவ குழுவினா் சாதிக் உல்லாகானுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.

தற்போது அவா் முழுவதுமாகக் குணமடைந்து நலமுடன் உள்ளாா். மேலும் இம் மருத்துவமனையில் அனைத்து சிறப்புப் பிரிவு மருத்துவ வல்லுநா்களும் மற்றும் அதிநவீன வசதிகளும் இருப்பதால் இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்ய முடிந்தது. டயாலிசிஸ் மேற்கொண்டு வரும் சா்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக செயல் இழந்து அவதிப்படும் நோயாளிகள் குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புவோா் விநாயகா மிஷின் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அணுகலாம் என்றனா்.

அப்போது துணை மருத்துவ இயக்குநா் அசோக், நிா்வாக மேலாளா் கோபு, சிறுநீரக மாற்று ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் மற்றும் மாா்க்கெட்டிங் மேலாளா் அருள்மணி உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT