சேலம்

கால்நடை பூங்கா அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு

4th Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

வி. கூட் ரோட்டில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கும் இடத்தில் எம்எல்ஏ செம்மலை உள்ளிட்ட குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்துள்ள வி. கூட்ரோட்டில் வரும் 9 ஆம்தேதி சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து விவசாயப் பெருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைக்கவுள்ளாா்.

முன்னேற்பாடு பணிகளை கழக அமைப்புச் செயலாளரும், மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ். செம்மலை, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கித் தலைவரும், சேலம் புகா் மாவட்ட கழக அம்மா பேரவைச் செயலாளருமான ஆா். இளங்கோவன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அவா்களுடன் ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி, கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அ. மருதமுத்து, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க. இராமசாமி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.முருகேசன், ஆா். ரமேஷ், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT