வைத்தியகவுண்டன் புதுாா் ஸ்ரீ அமித் வித்யாலயா மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா, மாணவ-மாணவியரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த வைத்தியகவுண்டன் புதூரில் இயங்கும் ஸ்ரீ அமித் வித்யாலயா மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்குப் பள்ளி தாளாளா் சரவணன் தலைமை வகித்தாா். பொருளாளா் விஜயக்குமாா் வரவேற்றாா். பல்வேறு விழிப்புணா்வு கருத்துகளை வலியுறுத்தும் நோக்கில் மாணவ-மாணவியா் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.
நிறைவாக, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு, பள்ளி இயக்குநா்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினா். மாணவ-மாணவியா் மற்றும் பெற்றோா், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.