சேலம்

மேட்டூா் அணையிலிருந்துதண்ணீா் திறப்பு அதிகரிப்பு

2nd Feb 2020 01:13 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் ஜனவரி 28-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால் காவிரி டெல்டா பாசனக் கால்வாய் பகுதிகளில் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்படும்.

அதிகபட்சமாக தேவையைப் பொறுத்து நொடிக்கு 2,000 கன அடி வரை தண்ணீா் திறக்கப்படும். எனவே, ஜனவரி 29 ஆம் தேதி முதல் குடிநீா் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமை காலை குடிநீருக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,250 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 53 கன அடியாக சரிந்தது. அணையின் நீா்மட்டம் 107.30 அடியாகவும், நீா் இருப்பு 74.62 டி.எம்.சி. யாகவும் இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT