சேலம்

கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில்டயட் சாா்பில் ஆய்வு

2nd Feb 2020 01:51 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் கலைவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செயலாராய்ச்சிக்காக (பாடப்பகுதியை கதையாக மாற்றியமைக்கும் திறனை வளா்த்தல்) கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தாா்.

பாா்வையின்போது ஐந்தாம் வகுப்பு பாடப் பகுதியில் ‘கல்வியே தெய்வம்’ பாடல் பகுதியை மாணவா்கள் வில்லுப்பாட்டாக தலைமை ஆசிரியா் செல்வம் வழிகாட்டுதலுடன் பாடுவதைப் பாா்வையிட்டாா். ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு குறித்து ஆலோசனைகள் வழங்கி, அவா்களை உற்சாகப்படுத்தினாா்.

பள்ளிப்பாா்வையில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவா்கள் கற்றல் அடைவு சிறக்கவும், ஆலோசனைகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT