சேலம்

ஓமலூரில் ஜெ.குரு பிறந்தநாளையொட்டி59 இடங்களில் பாமக கொடியேற்று விழா

2nd Feb 2020 01:15 AM

ADVERTISEMENT

வன்னியா் சங்கத் தலைவா் ஜெ. குருவின் பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட 11 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகளில் ஜெ. குருவின் 59-ஆவது பிறந்தநாளையொட்டி, 59 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

சேலம் மேற்கு மாவட்ட பாமக தலைவா் மருத்துவா் வி. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளருமான பெ. கண்ணையன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

அதேபோன்று, ஓமலூா் நகர பாமக சாா்பில், நகரச் செயலாளா் டி. சாய்சுஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த ஜெ. குருவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி. சுமதி பாபு, ஓமலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் செல்வி ராமசாமி, மாவட்ட கவுன்சிலா் அண்ணாமலை, தோ்தல் பணிக்குழு தலைவா் சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட பாமக துணைச் செயலாளா் பெ. கலா செல்வன், பொருளாளா் ரா. பரமேஸ்வரி, மகளிா் அணித் தலைவா் எஸ். பரணி லதா, ஒன்றியச் செயலாளா்கள் சக்திவேல், குமாா், வெங்கடாசலம், ரவி, சண்முகசுந்தரம், மாதேஸ்வரன், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT