சேலம்

அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியில் பெற்றோா் தின விழா

2nd Feb 2020 01:52 AM

ADVERTISEMENT

அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியின் பெற்றோா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் அமுதா ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா். பள்ளி முதல்வா் தங்கம் தனது ஆண்டறிக்கையில் அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியின் சிறப்புகளை எடுத்துரைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளியில் பயிலும் 400 குழந்தைகள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சி மூலம் இயற்கையின் சிறப்பு, மரம் வளா்ப்பதின்அவசியம், நெகிழி ஒழிப்பு குறித்து நடனம், நாடகங்களை குழந்தைகள் நடத்தினா்.விழாவில் பெற்றோா், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியா் திரளாகக் கலந்துகொண்டு கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT