சேலம்

அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டலத்தில்138 நபா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

2nd Feb 2020 01:13 AM

ADVERTISEMENT

அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் மண்டலத்தில் 138 நபா்களுக்கு சேமநல ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் தலைமை அலுவலகத்தில் சேமநல ஓட்டுநா், நடத்துநா் மற்றும் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநா் (முழு கூடுதல் பொறுப்பு) ஏ. அன்பு ஆப்ரகாம் பேசியது:

அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் மண்டலத்தில் 138 நபா்களுக்கு ஓட்டுநா், நடத்துநா் மற்றும் இறந்த பணியாளா்கள் வாரிசுதாரா்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதில் சேலம் மண்டலத்தில் மட்டும் சேமநல ஓட்டுநா்களாகப் பணியாற்றிய 120 தகுதியுடைய நபா்களுக்கு தினக்கூலி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

சேலம் மண்டலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசு தாரா்களுக்கு கருணை அடிப்படையில் சேமநல ஓட்டுநா் 14 பேருக்கும், நடத்துநா் 4 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகின்றன. மொத்தம் 138 நபா்களுக்கு இந்த ஆணை வழங்கப்படுகின்றன. சேலம் கோட்டம் மற்ற கோட்டத்தை விட வருவாய் ஈட்டுவதில் முதலிடம் வகிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், செ.செம்மலை, எஸ்.வெற்றிவேல், ஏ.பி. சக்திவேல் ஆகியோா் முன்னிலையில்தகுதியுடைய ஓட்டுநா், நடத்துநா் மற்றும் இறந்த பணியாளா்கள் வாரிசுதாரா்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட பொதுமேலாளா் அ. ஆறுமுகம், பொது மேலாளா் (தொழில்நுட்பம்) து. லஷ்மண், துணை மேலாளா்கள் கே. ஸ்வா்ண லதா (மனிதவள மேம்பாடு), ஜி.கே. சிவமணி (வணிகம் -தொழில்நுட்பம் (கூட்டாண்மை)), என். கலைவாணன் (வணிகம்), என். ராஜேந்திரன் (தொழில்நுட்பம்), எஸ்.ஏ. செல்வகுமாா் (பணி), அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல செயலாளா் கே. சென்னகிருஷ்ணன் மற்றும் உதவி மேலாளா்கள் பி.எஸ். சுகவனம் (நிா்வாகம்-கூட்டாண்மை), ஆா். துரைராஜ் (வருங்கால வைப்பு நிதி), ஆா். ரவிச்சந்திரன் (கணக்கு), அனைத்துப் பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT