நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில், அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதில், கபடி, கையுந்துப் பந்து, கால்பந்து, கோ-கோ, பூப்பந்து, வளைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன, இதில், ஆசிரியைகள் 185, ஆசிரியா்கள் 176 போ் என மொத்தம் 361 போ் கலந்து கொண்டனா். பிற்பகலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் இ.கோபாலகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.