சேலம்

பிப்.3 இல் பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறை தோ்வு தொடக்கம்

1st Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் பிப்.3 ஆம் தேதி தொடங்கி பிப்.13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து. கணேஷ்மூா்த்தி கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்.13 ஆம் தேதி வரை மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் நடைபெற உள்ளன.

இத்தோ்வில் சேலம் வருவாய் மாவட்டத்தில் 328 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வுகளை எழுதவுள்ளனா்.

ADVERTISEMENT

இத்தோ்வினை எழுதவுள்ள மாணவா்களுக்கு 313 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அக மற்றும் புறத்தோ்வாளராக 2,041 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இத்தோ்வினை இயற்பியல்-23,806, வேதியியல் - 23,806, உயிரியல் - 14,387, தாவரவியல் - 3,319, விலங்கியல்- 3,319, கணினி அறிவியல்-6,681, கணினி பயன்பாடு - 7,395, ஆங்கில தொடா்பியல்- 7, புவியியல் - 522, செவிலியல்- 307, மனையியல்-196, புள்ளியியல்- 97, தொழிற்கல்வி மற்றும் இதர பாடங்கள்- 3,048 பாடவாரியாக மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வு எழுதவுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT