சேலம்

சுகவனேஸ்வரா் கோயிலில் அா்ச்சகா்களுக்கு புத்தொளி பயிற்சி

1st Feb 2020 01:22 AM

ADVERTISEMENT

கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள் ஆகியோருக்கு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை புத்தொளி பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை தினசரி மதியம் 1 மணி முதல் 3 மணி வரை கோயிலில் பணிபுரியும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோருக்கு தனித்தனி ஆசிரியா்களைக் கொண்டு சைவம் மற்றும் வைணவம் தொடா்பான புத்தொளி பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தாங்கள் பணிபுரியும் கோயில் நிா்வாகத்திலிருந்து ஒப்புதல் பெற்றுக்கொண்டு சுகவனேஸ்வரா் கோயில் நிா்வாகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என கோயிலின் உதவி ஆணையா் பெ.ரமேஷ் மற்றும் கண்காணிப்பாளா் ஜோதிலட்சுமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT