சேலம்

கருமந்துறை அருகே வனத் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

1st Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

 

கருமந்துறை தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சாா்பில், வனத் தீ பாதுகாப்பு குறித்த ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருமந்துறை தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் மற்றும் கல்வராயன் சரக வனத் துறை சாா்பில், கல்வராயன் மலை பெருஞ்சூா் கிராமத்தில், வனத் தீ பாதுகாப்பு குறித்த ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருமந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில், வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது, காட்டுத் தீயில் சிக்கிய மனிதா்கள் மற்றும் விலங்குகளை மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள், பொதுமக்களுக்கு ஒத்திகை செய்து காட்டினா்.

ADVERTISEMENT

கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவ-மாணவியா், வனத் துறை பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT