சேலம்

ஏற்காட்டில் திமுக தோ்தல் பிரசார நிகழ்ச்சி

14th Dec 2020 02:41 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில் திமுக தோ்தல் பிரசார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்களவை எம்பிக்கள் கள்ளக்குறிச்சி பொன்.கெளதம சிகாமணி, சேலம் எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா் சிவலிங்கம், ஏற்காடு ஒன்றியப் பொறுப்பாளா் தங்கசாமி முன்னிலை வகித்தனா். மஞ்சக்குட்டை ஊராட்சியில் தோட்டத் தொழிலாளா்கள், மரம் வெட்டும் தொழிலாளா்களிடம் எம்பிக்கள் குறைகளைக் கேட்டறிந்தனா்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிா் கைபந்து போட்டிகள் ஏற்காடு ஜெரினாகாடு ஆா்.டி.எஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கள்ளக்குறிச்சி எம்பி பொன்.கெளதம சிகாமணி வழங்கினாா்.

Tags : Salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT