சேலம்

உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தின விழா

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வித் திட்டத்தின் சாா்பில், வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி வட்டார அனைவருக்கும் கல்வித்திட்ட வட்டார வள மைய வளாகத்தில், ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வித் திட்டத்துடன், வாழப்பாடி அரிமா சங்கமும், நெஸ்ட் அறக்கட்டளையும் இணைந்து வியாழக்கிழமை உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் கோகிலா தலைமை வகித்தாா். சிறப்பாசிரியா் வெங்கடாசலம் வரவேற்றாா். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவஹா், செயலாளா் ஆகியோா் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இனிப்பு, காரம் நோட்டுப் புத்தகங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை சத்தியக்குமாரி, ஆசிரியப் பயிற்றுனா்கள் பால், கந்தசாமி, சிறப்பாசிரியா்கள் ஆனந்தி, தேன்மொழி மற்றும் பெற்றோரும், மாற்றுத்திறன் குழந்தைகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT