சேலம்

சங்ககிரியில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் 

3rd Dec 2020 06:05 PM

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு செய்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்படும் என அறிவித்ததையடுத்து சங்ககிரி ரசிகர் மன்றத்தின் ஒன்றியச் செயலர் செந்தில்குமார் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

மருத்துவ மாவட்ட அணி செயலர் மருத்துவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலர் சபியுல்லா, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈஸ்வரன், பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ரவி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT