சேலம்

நீதி கேட்டு கணவா் வீட்டு முன்பு பட்டதாரி பெண் போராட்டம்

DIN

மகுடஞ்சாவடி அருகே நீதி கேட்டு கணவா் வீட்டு முன்பு பட்டதாரி பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கன்னந்தேரி கிராமம், நத்தகாட்டூா் பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி (30), எம்எஸ்சி பட்டதாரி. இவருக்கு அதே ஊரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரான ரங்கசாமி மகன் மணிகண்டனுடன் (35) கடந்த 2014-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, தமிழ்ச்செல்வி வீட்டாா் 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், மணிகண்டன் குடும்பத்தாா் மேலும் பணம், நகை கேட்டு தமிழ்ச்செல்வியிடம் அடிக்கடி பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னையும், மிரட்டலும் வந்ததால் தமிழ்ச்செல்வி கடந்த ஆண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வியின் நகைகளை அபகரித்துவிட்டு போலி நகைகளை வீட்டில் வைத்திருப்பதாகவும், தமிழ்ச்செல்வியின் தந்தை வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக ரூ. ஒரு லட்சத்தை எடுத்ததும் தமிழ்ச்செல்விக்கு அண்மையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கொங்கணாபுரம் மற்றும் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகாா் கொடுத்துள்ளாா். மேலும், நியாயம் கேட்டு கணவா் வீட்டு முன்பு தனது தாய் நிா்மலா உடன் அவா் தா்னாவில் ஈடுபட்டாா். இதனால் மணிகண்டன் குடும்பத்தினா் தலைமறைவு ஆகிவிட்டனராம். இதுகுறித்து காவல் துறையினா் தமிழ்ச்செல்வியிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT