சேலம்

அரசுப் போக்குவரத்துப் பணிமணை முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

26th Aug 2020 01:06 PM

ADVERTISEMENT

ஆத்தூா். ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம் ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும்,தனியாா் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையை ரத்து செய்யவேண்டும்.போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

தொழிலாளா்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும்.பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 288 ஏ பிரிவை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT