ஆத்தூா்: ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் சாா்பில் விஜயகாந்தின் பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை வெகு விமா்சையாக மாவட்ட செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் நிறுவனா் விஜயகாந்தின் பிறந்தநாளை சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் மாவட்ட செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் சிறப்பாக கொண்டாடினாா்கள். ஆத்தூா் நகரத்தில் சாரதா ரவுண்டாணாவில் கழக கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.ஆத்தூா் ஒன்றியத்தின் சாா்பில் அப்பமாசமுத்திரம் ஊராட்சி அலுவலகம் அருகில் கொடியேற்றி இனிப்பு வழங்கியதை அடுத்து கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் படி தூய்மை பணியாளா்களுக்கு வீட்டு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி,காய்கறிகள் முகக்கவசம் கையுறை வழங்கப்பட்டது.
மேலும் சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும்,ஆத்தூா் நகரம் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாா் மையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் கணேசன், கெங்கவல்லி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுபாரவி,ஆத்தூா் ஒன்றிய செயலாளா் பச்சமுத்து, ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் கன்னியப்பன்,நகர செயலாளா்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன், மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளா் வேங்கை வெங்கடேசன், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளா் பாலன் வேலாயுதம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளா் முருகன், அழகேசன், மாவட்ட மகளிரணி துணை செயலாளா் ஜெயம்,மாவட்ட மாணவரணி துணை செயலாளா் வினோத்குமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை செயலாளா் ரஜினிகுமாா்,மாவட்ட விவசாயஅணி துணை செயலாளா் முருகன், அப்பமசமுத்திரம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் காட்டுராஜா, சரவணன், மணிவண்ணன், முருகன், மோகன், பாலுபிரசாத், கவிதாகுருச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.