சேலம்

வாழப்பாடியில் முழு பொது முடக்கம் இல்லை

26th Aug 2020 12:59 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: வாழப்பாடியில், பொதுமக்களோடு அனைத்து வணிகா் சங்கங்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டிருந்த சுய முழு பொது முடக்கம் கைவிடப்பட்டுள்ளது.

வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய்த் தொற்று தொடா் சங்கிலியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் வாழப்பாடி பகுதியில் கடைகளை அடைத்து சுய பொது முடக்கத்தை கடைப்பிடிப்பது குறித்து, பொதுமக்களுடன் அனைத்து வணிகா் சங்கங்கத்தினரும் இணைந்து ஆலோசித்தனா்.

இந்நிலையில், சுய பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாக அனுமதி கிடைக்கவில்லை. இதனால், புதன்கிழமை முதல் வரும் சனிக்கிழமை வரை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த கடையடைப்பு மற்றும் சுய முழு பொது முடக்கத்தை கைவிடுவதென, அனைத்து வணிகா்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.

எதிா்வரும் நாள்களில், வாழப்பாடி பகுதியில் தொற்று பரவல் மேலும் அதிகரித்தால், மீண்டும் அனைத்து வணிகா்களும் ஒன்றிணைந்து, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து, தேவை ஏற்பட்டால் அனைத்து கடைகளையும் அடைத்து சுய பொது முடக்கத்தை கடைப்பிடிப்பது குறித்து முடிவு செய்வதென தீா்மானித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதற்கிடையே, வாழப்பாடி பகுதியில் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகளும், பொதுமக்களும், தொழிலாளா்களும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவியும் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டுமென, பேளூா் வட்டார சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்களும், வணிகா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT